×

ஆபாச வீடியோ விவகாரம் வேட்டியை வாங்கி தாரேன் மானத்தை காப்பாத்திக்கங்க…: சித்தராமையா கிண்டல்

பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சமீபத்தில் 60 வேட்டிகள் வாங்கினார். சித்தராமையா எதற்காக இவ்வளவு அதிகமாக வேட்டி வாங்கினார் என்பதற்கு பேரவையில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் மாநில பாஜ தலைவர் நளின்குமார் சித்தராமையா வேறு கட்சியில் இணையவுள்ளார். அதற்காகவே இவ்வளவு வேட்டிகள் வாங்கினார் என்று டிவிட் பதிவிட்டார். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது:பாஜவினர் மத்தியில் சிடி என்றால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 19 சிடி அது போல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவை வெளியானால், மாநில பாஜ தலைவர் நளின்குமார் உள்ளிட்ட தலைவர்களின் மானம் காற்றில் பறக்கும் நிலையில் அதை மூடி மறைத்து காப்பாற்றிக்கொள்வதற்கு தேவை என்றால் என்னுடைய சொந்த செலவில் புதிதாக வாங்கி வைத்துள்ள வேட்டிகளை  தருகிறேன். விருப்பம் இருந்தால் இதை வாங்கி மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார்….

The post ஆபாச வீடியோ விவகாரம் வேட்டியை வாங்கி தாரேன் மானத்தை காப்பாத்திக்கங்க…: சித்தராமையா கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Vetti ,Taren ,Siddaramaiah ,Bengaluru ,
× RELATED தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ...